உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கண்ணாவை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார் தலைமை நீதிபதி சந்திரசூட்
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் பதவியேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு வயது 65 ஆகும். அதன்படி, தலைமை நீதிபதிசந்திரசூட் வரும் நவம்பர் 10-ம்தேதி ஓய்வு பெறுகிறார்.
இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்ததலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார்.
0 Comments