Loading . . .




போரினால் பாதிக்கப்பட்டு உள்ள லெபனான் மக்களுக்கு உதவ மத்திய அரசு சார்பில் 33 டன் மருந்துகள் அனுப்பப்பட்டு உள்ளன

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

டெல்லியில் இருந்து லெபனானுக்கு விமானம் மூலம் நேற்று 33 டன் மருந்துகள் அனுப்பப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேல் ராணுவம் நேரடியாக லெபனான் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது.

தற்போது இஸ்ரேல் எல்லையை ஒட்டிய லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும் முன்னேறி வருகிறது. இருதரப்பு போரில் லெபனானில் இதுவரை 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த சூழலில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் மக்களுக்கு உதவ மத்திய அரசு சார்பில் 33 டன் மருந்துகள் அனுப்பப்பட்டு உள்ளன.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News