ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
9-வது ஆயுர்வேத நாளை ஒட்டி டெல்லியில் நேற்று அரசு நலத்திட்ட விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, தமிழ்நாடு உட்பட 18 மாநிலங்களில் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதார நலத் திட்டங்களை தொடங்கிவைத்தார். குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இதன்படி 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும். புதிய திட்டத்தின் மூலம் 6 கோடி மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆந்திராவின் அமராவதி எய்ம்ஸ் மருத்துவமனையில் ட்ரோன் சேவையை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதன்படி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள குக்கிராமமான நூதக்க ஆரம்ப சுகாதார மையத்துக்கு ட்ரோன் அனுப்பப்பட்டது. அங்கு ஒரு பெண் நோயாளியிடம் இருந்து பெறப்பட்ட ரத்த மாதிரி ட்ரோனில் வைக்கப்பட்டது. பின்னர் ட்ரோன் எய்ம்ஸ் மருத்துவமனையை வந்தடைந்தது. இந்த ட்ரோன் வசதி அனைத்து மருத்துவமனைகளிலும் தொடங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
0 Comments