மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் முப்படை தளபதிகள், ராணுவ வீரர்களுடன் இந்தாண்டு தீபாவளி கொண்டாட திட்டம்
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் முப்படை தளபதிகளும் திட்டமிட்டுள்ளனர்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன எல்லையான தவாங் பகுதியில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளி கொண்டாட உள்ளார். இந்நிகழ்ச்சியில், ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இதே மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இதுபோல முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் அந்தமான் நிக்கோபரில் பணிபுரியும் வீரர்களுடனும், கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி குஜராத்தின் போர்பந்தரில் உள்ள வீரர்களுடனும் விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி.சிங் ஜம்மு காஷ்மீரில் பணிபுரியும் வீரர்களுடனும் தீபாவளி கொண்டாட உள்ளனர்.
0 Comments