மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தித் துறை அமைச்சர்களின் மாநாட்டில் அமைச்சர் வி செந்தில்பாலாஜி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஒன்றிய அமைச்சர் மனோகர் லாலிடம் வழங்கினார்
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
புதுதில்லியில் நடைபெற்ற அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தித் துறை அமைச்சர்களின் மாநாட்டில் தமிழ்நாடு அரசின் மின்சாரம், மதுவிலக்கு 'மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி கலந்து கொண்டு, ஒன்றிய அரசின் மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் அவர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் க.நந்தகுமார், இ.ஆ.ப., தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர் விசு மகாஜன்,இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments