Loading . . .




மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது : நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகின்றன, முடிவுகள் 23ம் தேதி வெளியாகின்றன

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இங்கு தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்த உள்ள 81 தொகுதிகளிக்கு 2 கட்டங்களாக சட்டப் பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்குள்ள 43 தொகுதிகளில் கடந்த 13-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

ஜார்கண்ட்டில் காங்கிரஸ் கட்சி 30 இடங்களிலும், ஜேஎம்எம் 42 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் தீவிரமாக நடைபெறவில்லை என இண்டியா கூட்டணியில் உள்ள ஜேஎம்எம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகள் வருத்தம் தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாகின்றன.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News