Loading . . .




மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோவில் ரூ.44,605 கோடி​யில் செயல்​படுத்​தப்பட உள்ள கென்-பெட்வா ஆறுகள் இணைப்பு திட்டத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

​முன்​னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்​தநாளை முன்னிட்டு நினைவு அஞ்சல்​தலை, நாணயத்தை வெளி​யிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ரூ.44,605 கோடி​யில் செயல்​படுத்​தப்பட உள்ள கென்​-பெட்வா நதிகள் இணைப்பு திட்​டத்​துக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், ரூ.44,605 கோடி​யில் செயல்​படுத்​தப்பட உள்ள இந்த திட்​டத்​தின்​கீழ் தவுதான் அணை கட்டப்​படும். அங்கிருந்து இரு ஆறுகளுக்கு இடையே 221 கி.மீ. தூரத்​துக்கு இணைப்பு ஏற்படுத்​தப்​படும். இதன்​மூலம் மத்திய பிரதேசத்​தின் 10 மாவட்​டங்களை சேர்ந்த 44 லட்சம் பேருக்​கும், உத்தர பிரதேசத்​தின் 21 லட்சம் பேருக்​கும் குடிநீர் விநி​யோகம் செய்​யப்​படும்.

இதுதவிர, சுமார் 2 ஆயிரம் கிராமங்களை சேர்ந்த 8.11 ஹெக்​டேர் நிலம் நீர்ப்​பாசன வசதியை பெறும். இதன்​மூலம் 7.18 லட்சம் விவசாய குடும்​பங்கள் பயனடை​யும். மேலும் நீர்​மின்​சக்தி திட்டம் மூலம் 103 மெகாவாட் மின்​சா​ரத்​தை​யும், சூரிய மின்​சக்தி திட்டம் மூலம் 27 மெகாவாட் மின்​சா​ரத்​தை​யும் உற்பத்தி செய்ய இந்த திட்டம் வகை செய்​யும். இதுதவிர, மத்திய பிரதேசத்​தின் கந்த்வா நகரில் நிறுவப்பட்டுள்ள ஓம்காரேஷ்வர் மிதக்​கும் சூரிய மின்​சக்தி திட்​டத்​தை​யும் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்​தார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News