Loading . . .




ஒரு சிறந்த பொருளாதார நிபுணரை மட்டுமின்றி, ஒரு உயர்ந்த மனிதநேய உள்ளத்தை ( டாக்டர் மன்மோகன் சிங் )இந்திய இழந்துள்ளது

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

முன்​னாள் பிரதமர் மற்றும் பொருளாதாரத் துறையின் பாரிய ஆளுமையாக விளங்கிய டாக்டர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. இந்தியா​வின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்​சிங் கடந்த 1932 செப்​.26-ல் மேற்கு பஞ்சாபில் (தற்​போது பாகிஸ்​தானில் உள்ளது) பிறந்​தவர்.

காங்​கிரஸ் மூத்த தலைவர்​களில் ஒருவரான இவர் கடந்த 1991-96 நரசிம்​ம​ராவ் தலைமையிலான அமைச்​சர​வை​யில் நிதி அமைச்​சராக பதவி வகித்​தார். பொருளாதார வல்லுநரான இவர் இந்தியா​வின் பொருளாதார தாராளமய​மாக்கல் கொள்​கை​யின் தொடக்​கத்​துக்கு வித்திட்டவர். 1982-1985 காலகட்டத்தில் ரிசர்வ் வங்கி​யின் கவர்னராக​வும் பதவி வகித்​துள்ளார். காங்​கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்​போக்கு கூட்டணி அரசில் 2004 மே மாதம் முதல் 2014 மே மாதம் வரை தொடர்ந்து 2 முறை பிரதமராக பதவி வகித்​தார். மேலும் மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற மட்டுமின்றி, பேராசிரியராகவும் ஐக்கிய நாடுகள் சபையில் ஆலோசகராகவும் பணியாற்றிய வரலாற்று சிறப்பு மிக்க நிபுணர்.    

மேலும், 2004 முதல் 2014 வரை இந்திய பிரதமராக பதவி வகித்த டாக்டர். மன்மோகன் சிங், அமைதியுடனும், ஆக்கப்பூர்வமாகவும் தனது முழு ஆற்றலுடனும் இந்தியாவின் வளர்ச்சியை இலகுவாக வழிநடத்தினார். முன் அவரது வழிகாட்டுதலின் தொடர்ச்சியின் கீழ் இந்தியா உலக அரங்கில் தற்பொழுது பொருளாதார சக்தியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இன்று ஒரு சிறந்த பொருளாதார நிபுணரை மட்டுமின்றி, ஒரு உயர்ந்த மனிதநேய உள்ளத்தையும் இழந்துள்ளது.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்​சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா,காங்​கிரஸ் தலைவர் மல்லி​கார்ஜுன கார்கே, மூத்த காங்​கிரஸ் தலைவர்கள் சோனியா, எம்.பி. ராகுல், எம்.பி. பிரியங்கா காந்தி, தமிழக ​முதல்​வர் ஸ்​டா​லின் உள்​ளிட்ட பல்​வேறு ​மாநில ​முதல்​வர்​களும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்​.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News