பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்ததோடு பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீர், ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேநே்திர மோடி, நாடு முழுவதும் ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் ஏறக்குறைய 100%-ஐ எட்டி இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் காணொலிக் காட்சி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்ததோடு பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர், கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய முனைய ரெயில் நிலையத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "2025-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை 1000 கிலோமீட்டருக்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது. டெல்லியில் அண்மையில் நமோ பாரத் ரயில் சேவையும், டெல்லி மெட்ரோ ரயில் திட்டங்களும் தொடங்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, தெலங்கானா மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் வடக்கு, கிழக்கு, தெற்கு பிராந்தியங்களுக்கான நவீன போக்குவரத்து இணைப்பில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது," என கூறினார்.
0 Comments