விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு அவரை, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து ரூ.2.08 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விசாகப்பட்டினம் ரயில்வே மண்டலம், நவீன தொழிற்பேட்டை, பசுமை ஹைட்ரஜன் மையம் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும். மேலும், இவ்விழாவில் ஆளுநர் அப்துல் நசீர், அமைச்சர் நாரா லோகேஷ், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
0 Comments