மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் திருத்தம் செய்ய, 8வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்கள், சலுகைகளை தீர்மானிக்க 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழு அமைக்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.7,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500-ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்பட்டது. அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.2,50,000 ஆகவும் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
7-வது ஊதியக் குழுவின் பதவிக் காலம் 2025 டிசம்பர் 31-ம் தேதி நிறைவடைகிறது. இந்த சூழலில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 8-வது ஊதியக் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
மேலும், ‘‘8-வது ஊதியக் குழு தலைவர், 2 உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள்’’ என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
0 Comments