தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடரவும், சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று ஒப்புதல் அளித்தது
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சணலுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை 2025-26-ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,650-ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இது கடந்தாண்டில் ரூ.5,335-ஆக இருந்தது. தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.315 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விவசாயிகளுக்கு சராசரி உற்பத்தி செலவின் மீது 66.8 சதவீத வருவாய் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. இது சணல் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள 40 லட்சம் குடும்பங்களுக்கு பயன் அளிக்கும்.
0 Comments