Loading . . .




28 ​மாநிலங்​கள், 8 யூனியன் பிரதேசங்​கள் உள்ள இந்திய நாட்​டின் இரண்டாவது பெண்​ ​முதல்வர்​ என்ற பெருமையை ரேகா குப்தா பெற்​றுள்​ளார்

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

நாடு முழு​வதும் 21 மாநிலங்​களில் பாஜக மற்றும் அந்த கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த சூழலில், பாஜக​வின் ஒரே பெண் முதல்வர் என்ற பெரு​மையை ரேகா குப்தா பெற்றுள்​ளார். நாட்டில் 28 ​மாநிலங்​கள், 8 யூனியன் பிரதேசங்​கள் உள்ளன. இ​தில், மேற்​கு ​வங்​கத்​தில் மட்டுமே பெண் முதல்​வர் (மம்தா பானர்ஜி) ஆட்சி நடத்து​கிறார். அவருக்கு அடுத்து நாட்டின் 2-வது பெண்​ ​முதல்வர்​ என்ற பெருமையை ரே​கா பெற்​றுள்​ளார்.

இவர் கடந்த 1974 ஜூலை 19-ம் தேதி ஹரியானா​வின் ஜுலானா பகுதி​யில் ரேகா குப்தா பிறந்தார். பின்னர் டெல்லி பல்கலைக்​கழகத்​தில் பயின்​ற​போது, ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்​யார்த்தி பரிஷத்​தில் ரேகா குப்தா இணைந்​தார். டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக பணியாற்றினார். பி.காம் முடித்த பிறகு, காஜி​யாபாத் ஐஎம்​ஐஆர்சி கல்லூரி​யில் சட்டம் பயின்று வழக்​கறிஞரானார்.

கல்லூரி காலம் முதலே அரசி​யலில் தீவிர ஆர்வம் காட்டிய ரேகா குப்தா, டெல்லி மாநகராட்சி தேர்​தலில் போட்டியிட்டு 3 முறை கவுன்​சிலராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். டெல்லி பாஜக​விலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்​தார். ரேகா குப்தா, இத்தேர்தலில் டெல்லி ஷாலி​மார் பாக் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு முதல்​முறையாக எம்எல்​ஏவாக தேர்வு செய்​யப்​பட்​டார்.

இந்த தேர்​தலில் டெல்லி பெண்கள் பெரு​வாரியாக பாஜக​வுக்கு வாக்​களித்​த​தால் 27 ஆண்டு​களுக்கு பிறகு தலைநகரில் பாஜக ஆட்சி​யை கைப்​பற்றியது. எனவே, பெண்களுக்கு மரியாதை செலுத்​தும் வகையில் பெண் முதல்வர் பதவி​யேற்றுள்​ளார் என கட்சி வட்டாரங்கள் தெரி​வித்​துள்ளன.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News

Latest News