முதல் முறையாக டிரினிடாட் & டொபாகோ நாட்டின் உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி
Janani G 9 months ago தேசிய செய்திகள்
அரசு முறை பயணமாக டிரினிடாட் & டொபாகோ சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்த நாட்டின் மிக உயரிய குடிமக்கள் விருதான ‘தி ஆடர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ’ வழங்கப்பட்டது. இந்த விருதை ஒரு வெளிநாட்டு தலைவருக்கு வழங்குவது இதுவே முதல்முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின் போது, மோடி அந்நாட்டு அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்காலூ மற்றும் பிரதமர் கம்லா பிரசாத் பைசெசாரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இந்த விருதுப் பெறுதல், இந்தியா மற்றும் டிரினிடாட் & டொபாகோ இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் மிக முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
0 Comments