மூன்று மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்: குடியரசுத் தலைவர் அறிவிப்பு
Janani G 9 months ago தேசிய செய்திகள்
கோவா, ஹரியானா மற்றும் லடாக் பகுதிகளுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் பேரில், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கஜபதி ராஜு, கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநில ஆளுநராக அசிம் குமார் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக கவிந்தர் குப்தா பொறுப்பேற்க உள்ளார். மூவரும் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்து, தங்களது புதிய பொறுப்புகளில் சிறப்பாக செயல்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments