Loading . . .




பிரதமர் நரேந்திர மோடியின் பிரிட்டன் செல்லும் அரசுமுறை வெளிநாட்டு பயணம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Janani G 11 months ago தேசிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது நான்கு நாள் அரசுமுறை வெளிநாட்டு பயணத்தை ஆரம்பிக்கிறார். அவர் முதற்கட்டமாக பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரின் அழைப்பின்பேரில் இரண்டு நாள் பயணமாக லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகும். ஒப்பந்தம் கைசேரும் பட்சத்தில், பிரிட்டனுக்குச் செலுத்தப்படும் இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகளில் 99% வரை விலக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணத்தின் இரண்டாம் கட்டமாக அவர் மாலத்தீவுக்குச் செல்ல உள்ளார்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News

Latest News