Loading . . .




நாட்டின் எரிபொருள் இறக்குமதியை குறைப்பது அவசியம் என சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்

Janani G 8 months ago தேசிய செய்திகள்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்திய பொருட்களுக்கு 50% வரிவிதித்துள்ளது அமெரிக்கா. இந்த நிலையில், சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் எரிபொருள் இறக்குமதியை குறைப்பது அவசியம் என வலியுறுத்தினார்.

பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருட்களில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும்  டாலர், பவுண்டு போன்றவற்றின் மீது சார்ந்து இருப்பது உண்மையான தற்சார்பு அல்ல என்றும் தெரிவித்தார். இதனால், அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு பிரதமர் மோடி மறைமுக பதிலடி கொடுத்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. எரிசக்தி துறையில் தன்னிறைவு பெறுவது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், தேசிய பாதுகாப்புக்கும் முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News