டாலருக்கு மாற்றாக உள்ளூர் நாணயத்தில் வர்த்தகம் : பிரதமர் மோடி அறிவிப்பு
The Forecast 9 months ago தேசிய செய்திகள்
இந்தியா – மொரிஷியஸ் இடையேயான வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை தவிர்த்து, இரு நாடுகளின் உள்ளூர் நாணயங்களில் மேற்கொள்ளும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் அவர் இந்த தகவலை வெளியிட்டார். இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டது. மேலும், மொரிஷியஸின் தேவைகளை கருத்தில் கொண்டு சிறப்பு பொருளாதார தொகுப்பும் இந்தியா வழங்க உள்ளதாக மோடி உறுதியளித்தார். இதன் மூலம் வர்த்தகத்தில் சுதந்திரமும், பொருளாதாரத்தில் நம்பிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments