Loading . . .




'SIR' படிவங்கள் விநியோகம்: 99.20% வாக்காளர்களைச் சென்றடைந்ததாக ECI தகவல்

Janani G 6 months ago தேசிய செய்திகள்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பிழைகளைச் சரிசெய்வதற்கான SIR பணிகள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் 99.20% பேருக்கு இந்தப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்துள்ளது.

இந்த விவரத்தின்படி, தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் 6.41 கோடியில், 6.35 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களை இந்தப் படிவம் சென்றடைந்துள்ளதாக ECI குறிப்பிட்டுள்ளது.

மேலும், விநியோகிக்கப்பட்ட படிவங்களில் 91.49% படிவங்கள் ஆன்லைன் வாயிலாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News

Latest News