Loading . . .




₹5,083 கோடி பாதுகாப்பு ஒப்பந்தம்: கடற்படைக்கு ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் கொள்முதல்

The Forecast 1 month ago தேசிய செய்திகள்

இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படையின் திறனை மேம்படுத்தும் வகையில் ₹5,083 கோடி மதிப்பிலான முக்கிய பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது. “Make in India” திட்டத்தின் கீழ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 6 Mk-III வகை ஹெலிகாப்டர்கள் வாங்கப்படுகின்றன. அதேபோல் ரஷ்ய நிறுவனத்திடமிருந்து ‘ஷெட்டில்’ வகை ஏவுகணைகளும் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இந்த புதிய உபகரணங்கள் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தி, கடலோர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News