லோக்சபா சபாநாயகரை நீக்க தீர்மானம்: பாராளுமன்றத்தில் எதிர்பார்ப்பு கடும் விவாதம்
Janani G 1 month ago அரசியல் செய்திகள்
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி திங்கட்கிழமை (9.3.26) மீண்டும் தொடங்கும் நிலையில், லோக்சபா சபாநாயகரை நீக்கும் தீர்மானம் காரணமாக கடும் விவாதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மீது தாக்கல் செய்யப்பட்ட நீக்க தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பிக்கள் மொஹம்மது ஜாவேத், கே. சுரேஷ் மற்றும் மல்லு ரவி ஆகியோர் முன்வைத்துள்ளனர். இதற்கு 118 எதிர்க்கட்சித் உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
சபாநாயகர் ஓம் பிர்லா இந்த விவாதத்தை தலைமை தாங்கமாட்டார். துணை சபாநாயகர் இல்லாததால், மூத்த உறுப்பினரான பாஜக எம்.பி ஜகதம்பிகா பால் கூட்டத்தைக் கண்காணிக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த தீர்மானம் நிறைவேற வாய்ப்பு குறைவாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தை பொதுமக்கள் முன் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளன. இதனால் பாராளுமன்ற கூட்டத் தொடரில் முக்கியமான அரசியல் விவாதங்கள் நடைபெறவுள்ளது.
0 Comments