Loading . . .




வரலாறு காணாத வீழ்ச்சி: ரூபாய் மதிப்பு ₹92.31 ஆக சரிவு

Janani G 1 month ago தேசிய செய்திகள்


அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 11 காசு குறைந்து ₹92.31 ஆக பதிவாகியுள்ளது. உலகளாவிய அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார அச்சம் காரணமாக நாணய சந்தையில் இந்த மாற்றம் ஏற்பட்டதாக பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூபாய் மதிப்பு குறைந்ததன் விளைவாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக தங்கம், கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையை தொடர்ந்து, சர்வதேச சந்தை மாற்றங்களை இந்திய பொருளாதார அமைப்புகள் நெருக்கமாக கவனித்து வருகின்றன.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News