Loading . . .




மூன்று நாளில் LPG உற்பத்தி உயர்வு

Janani G 1 month ago தேசிய செய்திகள்

இந்தியாவில் சமீபத்தில் கேஸ் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கலை சமாளிக்க மத்திய அரசு உள்நாட்டு LPG உற்பத்தியை வேகமாக அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடந்த மூன்று நாட்களுக்குள் LPG உற்பத்தி 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாட்டின் பல சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வீட்டு உபயோக LPG சிலிண்டர்களின் தயாரிப்பை முழு திறனுடன் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் சந்தையில் ஏற்பட்டுள்ள கேஸ் பற்றாக்குறையை விரைவாக சரிசெய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் LPG விநியோகம் விரைவில் சீராகி மக்களுக்கு தேவையான கேஸ் தடையின்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News