மத்திய அரசு செஸ் மற்றும் கூடுதல் வரி வசூலிப்பது அரசியலமைப்பில் அனுமதிக்கப்பட்டது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மக்களவையில் பேசிய அவர், அரசியலமைப்பு உருவாக்கியவர்கள் இந்த விதிகளை தெளிவாக நிர்ணயித்திருந்தனர் என்றும், மத்திய அரசு தொடர்ந்து இந்த வசூல் முறையை பயன்படுத்தும் என்றும் கூறினார்.
எதிர்க்கட்சிகள், இந்த வரிகள் மாநிலங்களுக்கு பகிரப்படும் தொகையில் சேர்ப்பதில்லை என குற்றம் சாட்டிய நிலையில், அதற்கு பதிலளித்த அமைச்சர், மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிகமாகவே நிதி வழங்கி வருவதாக தெரிவித்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் செஸ் மற்றும் கூடுதல் வரி மூலம் கிடைத்த தொகையின் 105 சதவீதத்தை மாநிலங்களுக்கு செலவிட்டுள்ளதாகவும், அதாவது வசூலித்ததை விட அதிகமாகவே வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது மாநிலங்களின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் உறுதியை காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையேயான நிதி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த விளக்கம் பார்க்கப்படுகிறது.
0 Comments