மேற்கு ஆசிய நிலைமையை முன்னிட்டு இந்தியாவில் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்ற வதந்திகள் முழுமையாக தவறானவை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் , இந்திய அரசால் எந்த லாக்டவுன் திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்துள்ளார். சமீப நாட்களில் பரவிய தகவல்கள் உண்மையற்றவை என்றும் அவர் கூறினார்.
அதேபோல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும் இந்த வதந்திகளை மறுத்து, அரசில் இதுபற்றி எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று விளக்கினார்.
மேற்கு ஆசிய பதற்றம் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அச்சத்தை கருத்தில் கொண்டு இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும், சரிபார்க்கப்படாத தகவல்களை பகிர வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் மக்கள் மத்தியில் தெளிவு ஏற்பட்டு, அமைதி நிலை நிலைத்திருக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments