நாசா, அபோபிஸ் என்ற “காட் ஆஃப் கேயாஸ்” என அழைக்கப்படும் சிறுகோள் 2029 ஏப்ரல் 13ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வந்து கடக்கும் என தெரிவித்துள்ளது.
இந்த சிறுகோள் சுமார் 32,000 கிலோமீட்டர் தூரத்தில் பூமியை கடக்கும் என்றும், இதன் எடை சுமார் 20 மில்லியன் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான சிறுகோள் இத்தனை அருகில் வரும் நிகழ்வு மிகவும் அரிதானதாக கருதப்படுகிறது.
அறிவியலாளர்கள் கூறுவதாவது, இந்த நிகழ்வை சில பகுதிகளில் வெறும் கண்களால் கூட பார்க்க முடியும். இதனால் பொதுமக்களுக்கும் விண்வெளி ஆர்வலர்களுக்கும் இது ஒரு சிறப்பு வாய்ப்பாக இருக்கும்.
நாசா பல ஆண்டுகளாக இந்த சிறுகோளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தற்போதைய கணிப்புகள் படி, இந்த சிறுகோள் பூமிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படுத்தாது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, எதிர்கால ஆய்வுகளுக்கு முக்கியமான தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments