Loading . . .




தங்க நகை நிறுவன பங்குகள் கடும் சரிவு

Janani G 20 hours ago பங்கு சந்தை

பிரதமர் நரேந்திரா மோடி மக்கள் ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, முக்கிய நகை நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் கடுமையாக சரிந்தன. முதலீட்டாளர்களின் விற்பனை அழுத்தம் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வர்த்தக நேரத்தில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன பங்கு 9.27 சதவீதம் குறைந்தது. டைட்டன் பங்கு 6.73 சதவீதம் சரிவை சந்தித்தது. அதேபோல் தங்கமயில் ஜுவல்லரி நிறுவன பங்கு 5.64 சதவீதம் குறைந்தது.

தங்க நகை வாங்குதலில் குறைவு ஏற்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் உருவானதால், நகைத் துறை பங்குகளில் அதிகளவில் விற்பனை நடந்ததாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தங்க நகை விற்பனை இந்த துறையின் முக்கிய வர்த்தக ஆதாரமாக இருந்து வருகிறது.

உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் செலவுக் கட்டுப்பாடு குறித்து பேசப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் நகைத் துறை பங்குகள் மீது உடனடி தாக்கம் ஏற்பட்டது.

இருப்பினும், இந்திய பொருளாதாரத்தில் தங்க நகைத் துறை தொடர்ந்து முக்கிய பங்காற்றும் என சந்தை வட்டாரங்கள் கருதுகின்றன.


0 Comments

Post your comment here

பங்கு சந்தை Relateted News