Loading . . .




தாய்லாந்தில் ராட்சத டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு

Janani G 5 hours ago விலங்குகளும்.. பறவைகளும்..

தாய்லாந்து நாட்டில் தென்கிழக்கு ஆசியாவில் இதுவரை கண்டறியப்படாத மிகப்பெரிய டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் தெரிவித்ததன்படி, இந்த ராட்சத டைனோசர் சுமார் 27 மீட்டர் நீளமும் 27 டன் எடையும் கொண்ட தாவர உண்ணி வகையைச் சேர்ந்ததாகும்.


நீண்ட கழுத்து கொண்ட இந்த டைனோசர் சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். பண்டைய உயிரினங்களை ஆய்வு செய்து வந்த புவியியல் மற்றும் தொல்லுயிரியல் நிபுணர்கள் குழு மேற்கொண்ட அகழாய்வின் போது இந்த புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த கண்டுபிடிப்பு தென்கிழக்கு ஆசியாவின் பண்டைய உயிரியல் வரலாற்றை புரிந்துகொள்ள முக்கிய ஆதாரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதைபடிவத்தின் பல பகுதிகள் நல்ல நிலையில் கிடைத்துள்ளதால், டைனோசரின் உடல் அமைப்பு மற்றும் வாழ்வியல் குறித்த ஆய்வுகளை மேலும் விரிவாக மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.


இந்த தகவல் சர்வதேச அறிவியல் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது புதைபடிவத்தை பாதுகாக்கும் பணிகளும், மேலதிக ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


இந்த கண்டுபிடிப்பு மூலம் தென்கிழக்கு ஆசியாவின் பண்டைய உயிரின வரலாறு குறித்து புதிய தகவல்கள் வெளிவரும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


0 Comments

Post your comment here

விலங்குகளும்.. பறவைகளும்.. Relateted News