ஹார்முஸ் நீரிணை ஈரானின் மீற முடியாத சிவப்பு கோடு என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான தனது நிலைப்பாடு தொடரும் என்றும், ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு பதிலடி வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரானிய ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ராமினியா, ஹார்முஸ் நீரிணை ஈரான் எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்காத முக்கிய எல்லை என்று கூறினார். அமெரிக்காவுக்கு எதிரான எதிர்ப்பை இறுதிவரை தொடருவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கப் படைகள் ஈரானின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கினால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். இந்த கருத்துகள், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட சமீபத்திய கருத்துகளுக்கு பதிலாக வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக ஹார்முஸ் நீரிணை விளங்குவதால், அங்கு ஏற்படும் எந்த பதற்றமும் சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் உலக நாடுகள் இந்த முன்னேற்றங்களை கவனித்து வருகின்றன.
0 Comments