அமைச்சர் . கிஷன்ரெட்டி அவர்கள், 7 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 சிலைகளை தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப. அவர்களிடம் ஒப்படைத்தார்.
The Forecast 4 years ago தேசிய செய்திகள்
இன்று (01.06.2022) புதுடெல்லியில் ஒன்றிய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு ஒன்றிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர்
திரு. கிஷன்ரெட்டி அவர்கள், 7 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 10 சிலைகளை தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப. அவர்களிடம்
ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால், ஒன்றிய
வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, மாண்புமிகு ஒன்றிய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை
அமைச்சர் திரு. எல். முருகன், காவல் துறை இயக்குநர், சிலை திருட்டு தடுப்புப் பிரிவு, முனைவர். கி. ஜெயந்த்முரளி, இ.கா.ப. மற்றும் சிலை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றார்கள்.
0 Comments