Loading . . .




மாணாக்கர்கள் கல்விக்கு எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறீர்களோ, அந்த அளவிற்கு சுற்றுச்சூழலை பாதுகாத்திட கவனம் எடுத்து நம் பகுதி தூய்மையான பகுதி என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்

The Forecast 3 years ago விழுப்புரம்

மாணாக்கர்கள் கல்விக்கு எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறீர்களோ, அந்த

அளவிற்கு சுற்றுச்சூழலை பாதுகாத்திட கவனம் எடுத்து நம் பகுதி தூய்மையான

பகுதி என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்

.த.மோகன்,இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள் !!!

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், இன்று

(22.06.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.மோகன்,இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு

மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பள்ளியில் உள்ள வகுப்பறைகள்,

பள்ளி வளாகம் மற்றும் மகளிர்களுக்கான கழிப்பறை கட்டங்களை ஆகியவற்றை பார்வையிட்டு,

நாள்தோறும் கழிப்பறை வளாகங்களை சுத்தமாக வைப்பதுடன், நாளொன்றுக்கு மூன்று வேலையும்

சுத்தம் செய்து கழிப்பறை வளாகம் வைக்க வேண்டும். அதற்காக பள்ளி நிர்வாக குழுவுடன்

நகராட்சி ஒருங்கிணைந்து நாள்தோறும் சுழற்சி முறையில் சுமார் 10 பணியாளர்கள் இப்பணிக்கு

ஈடுபடுத்த வேண்டும். காரணம் 2,000-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பயிலும் பள்ளியாக

இருப்பதால் சுகாதாரத்தை பராமரிப்பதற்கு தனிக்கவனம் எடுத்திட வேண்டும். காரணம் சுற்றுச்சூழல்

தூய்மையாக இருந்தால்தான் நன்றாக படித்திடவும், உடல் ஆரோக்கியத்துடனும் இருந்திட முடியும்.

எனவே, பள்ளி நிர்வாகம் கவனம் எடுத்து இதற்கென பணியாளர்கள் நியமிப்பதுடன் நகராட்சி

நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து தூய்மைப்பணிக்கான திட்டமிடுதலை கையாண்டு பள்ளியை

சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கி

பேசுகையில், இப்பருவம் என்பது எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய காலகட்டமாகும். குறிப்பாக

சொல்லவேண்டுமென்றால் இப்பொழுது உங்களுக்கெல்லாம் கல்வி கற்கும்காலம் இந்த நேரத்தில்

மற்ற எந்த சிந்தனைகளும் இருக்காது. இப்படிப்பட்ட நிலையில் நாம் கற்கும் கல்வியை திட்டமிட்டு

செயல்படுத்துவோமானால் எதிர்காலம் சிறந்து விளங்கிடும். அதனால் கல்வி கற்கும் இப்பருவத்தில்

திட்டமிட்டு சிறந்து முறையில் கல்வி கற்று குறிப்பிட்ட இலக்கை பெற வேண்டும். அதற்கு இன்று

முதல் தனது இலட்சியம் என்ற உறுதிமொழியை ஒவ்வொருவரும் தனக்குள் ஏற்றுக்கொண்டு

சிந்தனை சிதறாமல் கல்வியை முழுமையாக கற்று முழுமையான மதிப்பெண்களை பெறுவேன் என்ற

இலட்சியத்தோடு படித்து இலக்கினை எய்திட வேண்டும்.

அதேபோல், ஒவ்வொரு மாணாக்கருக்கும் தனக்குள் தன்னம்பிக்கையும், மன

தைரியத்தையும் முழுமையாக வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு சூழ்நிலையில் தோல்வி

என்ற நிலை வரும்பொழுது துவண்டு விடக்கூடாது. தோல்வி என்பதும், வெற்றி என்பதும் நிலையான

ஒன்றல்ல மாற்றங்களுக்கு உட்பட்டதுதான். அதை உணர்ந்து செயல்பட்டாலே எல்லோரும்

தைரியசாலிகள்தான். பொதுவாக தோல்வி என்ற நிலை வரும்பொழுது, நமக்கு ஒரு அனுபவம்

கிடைக்கப்பெறும் அத்துடன் தோல்வியை பற்றி நினைத்து எதனால் இந்த பின்னடைவு என்று

ஆராயும்போது அதற்கான காரணம் கிடைப்பதால், மீண்டும் நாம் வெற்றியை நோக்கி

பயணிக்கும்பொழுது அந்த அனுபவத்தின் விளைவு நமக்கு இருமடங்காக வெற்றி கிடைக்கும். அந்த

அளவிற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் தோல்வி என்பது வெற்றிப்படியாகவே அமைந்து

சாதனையாளர்களாக உருவாகியிருக்கிறார்கள். ஆகவே, கல்விப்பருவத்தில் இருக்கும் நீங்கள்

தோல்வி என்பதை தோல்வியாக நினைக்காமல் அதை ஒரு அனுபவமாகவும், வெற்றிக்கான வழிகள்

என நினைத்து செயல்படுங்கள். மனதளவில் துவண்டுவிடாதீர்கள். எப்பொழுதுமே, வெற்றிக்கு

அருகாமையில் நீங்கள் இருக்கிறீர்கள் தைரியமாக, தன்னம்பிக்கையாக முயற்சியுங்கள். முடியும்

உங்களால்.

0 Comments

Post your comment here

விழுப்புரம் Relateted News