தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்களை (6.10.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகத் துறை
அமைச்சர் .கே.என். நேரு அவர்கள் சந்தித்து, உயிர்நீர் இயக்க (Jal Jecvan Missiom) திட்டத்தின் கீழ் 60 சதவிகித குடிநீர் குழாய்கள் இணைப்புகளைக் கொண்ட மாநிலங்களில் சிறந்த செயல்பாட்டிற்காக இந்திய குடியாகத் தலைவர் அவர்களால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட முதல் பரிசிற்கான விருது, தூய்மை இந்திய நகர்ப்புற இயக்கத்தின் (Swachh Bharat Mission) கீழ் தூய்மையான நகரமாக இராமேஸ்வரம் நகராட்சியும், போத்தனூர் பேரூராட்சியும் தேர்வு செய்யப்பட்டு அதற்காக ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அபைச்சகத்தால் வழங்கப்பட்ட விருது, ஆகிய மூன்று விருதுகளை காண்பிந்து வாழ்த்துப் பெற்றார்.
இந்நிகழ்வின்போது, முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப, தலைமைச் செயலாளர், சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், பா. பொன்னையா, இ.ஆ.ப.,நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர்,. டாக்டர் ஆர். செல்வராஜ். இ.ஆ.ப, ஆணையர் பேரூராட்சிகள், ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments