டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 91வது பிறந்தநாள் தமிழ்நாடு ஆளுநர் .என்.ரவி மலர் தூவி மரியாதை
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா
டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 91வது பிறந்தநாளான
(15.10.2022,) சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள அவருடைய
சிலைக்கு, தமிழ்நாடு ஆளுநர் .என்.ரவி அவர்கள்
மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 91வது பிறந்தநாளான இன்று
(15.10.2022) சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள அவருடைய
சிலைக்கு. மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என் ரவி அவர்கள் மலர் தூவி
மரியாதை செலுத்தினார்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி
மேம்பாட்டில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் எண்ணற்ற
பங்களிப்புகளை ஆளுநர் நினைவு கூர்ந்தார். டாக்டர்
கலாம், ஒரு சிறந்த அறிவியலறிஞராகவும், தொலைநோக்கு
பார்வையுடனும் செயல்பட்டதோடு எளிமை மற்றும் அறிவாற்றலின்
வடிவமாகவும் திகழ்ந்தார். இளைஞர்கள் மீது மிகவும் நம்பிக்கை
வைத்திருந்த அவர் தன்னுடைய ஆற்றல்மிகு செயல்பாடுகள் மற்றும்
சொற்களால் அவர்களை ஊக்கப்படுத்தினார். சுய-சார்புடையதும்
வலிமையானதுமான நாட்டை
கட்டமைப்பதில் இந்திய
இளைஞர்களுக்கு அவர் எப்போதும் உள்ளூக்கத்தை அளிப்பவராக
இருப்பார்.
டாக்டர் கலாமின் இலட்சியங்களை நனவாக்குவதற்கு.பெரிய
கனவுகளை காண வேண்டுமெனவும்,
வேண்டுமெனவும் மாணவர்களிடம்
கடினமாக உழைக்க
ஆளுநர்
வேண்டுகோள் விடுத்தார். "உங்களுடைய கடந்த காலத்தை குறித்து
வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; உங்களுடைய நிகழ்காலத்தை
நம்பிக்கையுடன் கையாளுங்கள்; உங்களுடைய எதிர்காலத்தை
அச்சமின்றி எதிர்கொள்ளுங்கள்" என்ற டாக்டர் கலாமின்
மேற்கோளை அவர் நினைவு கூர்ந்தார்.
ஆளுநரின் முதன்மைச் செயலாளர், திரு. ஆனந்தராவ் வி
பாட்டில் ஆளுநர் மாளிகை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
...
..
3 years ago