ஆணையத்தின் விசாரணை அறிக்கையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அன்புமணி ராமதாஸ்
The Forecast 3 years ago அரசியல் செய்திகள்
கோவையில் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நுால் விலை ஏற்றத்தால் சிறு, குறு நிறுவனங்கள் முடப்பட்டுள்ளன. 240 ரூபாயாக இருந்த நுால் விலை 480 ரூபாயாக உயர்ந்தது. தற்போது 80 ரூபாய் குறைப்பு போதுமானதாக இல்லை. தொழில் வளர்ச்சிக்கு வட்டியில்லா, பிணையமில்லா கடனுதவி வழங்க வேண்டும்.பரம்பிக்குளம் - ஆழியாறு அணை வாய்க்கால் பராமரிப்பு சரியில்லாததால் ஷட்டர் பழுதடைந்து, 12 டி.எம்.சி., தண்ணீர் வீணாகியது. பாண்டியாறு-- புன்னம்புழா திட்டம், நல்லாறு, பாம்பாறு போன்ற திட்டங்கள் குறித்து கேரளா அரசிடம் பேசி தீர்வு காண வேண்டும்.
தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் இலக்கு நிர்ணயித்து, மதுபானம் விற்பனை செய்வதுவருந்தத்தக்கது. இது நாட்டின் வளர்ச்சியல்ல; வீழ்ச்சி
தீபாவளி பண்டிகையின்போது, ஆம்னி பஸ் கட்டணம், விமானக்கட்டணத்துக்கும் மேலாக உள்ளது. அதிக கட்டணம் வாங்குவதை அரசு தடுக்க வேண்டும். ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையை, நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றால் ஒன்றுமே ஆகாது. தொழில்நுட்பமான விஷயங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. இதை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம். அதற்கு மேல் ஒன்றும் இல்லை.அ.தி.மு.,க.,வினர் பிரச்னையில், சபாநாயகர் நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும். துாத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்னையில், நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
0 Comments