Loading . . .




தெலங்கானாவில் ஆட்சசியை கவிழ்க பாஜக சதி பல நூறு கோடி பேரம் மூவர் கைது.

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியை கவிழ்க்க டிஆர்எஸ் எம்எல்ஏக்கள் 4 பேரிடம் ரூ.400 கோடி பாஜ பேரம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த பண்ணை வீட்டில் இருந்து ரூ.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாஜ சார்பில் பேரம் பேசிய சாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆபரேஷன் தாமரை மூலம் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை பாஜ கவிழ்த்து வருகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்களை இழுத்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சியை பாஜ கவிழ்த்தது.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 40 பேருக்கு தலா ரூ.20 கோடி என ரூ.800 கோடிக்கு பாஜ பேரம் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி இருந்தார். இதேபோல், பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜ பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் நடத்தப்பட்ட ஆபரேஷன் தாமரை தோல்வியடைந்தது. இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், பிரதமர் மோடி தெலங்கானா சென்றிருந்தார். அப்போது பேசிய ஒன்றிய அமைச்சர், ‘அடுத்த இலக்கு தெலங்கானாதான்’ என்று கூறியிருந்தார்.


இதற்கு பதிலளித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ‘தெலங்கானாவில் ஆட்சி கவிழ்த்தால், டெல்லியிலும் ஆட்சி கவிழ்க்கப்படும்’ என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஒன்றிய பாஜ அரசை சந்திரசேகர ராவ் நேரடியாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் சில வாரங்களுக்கு  முன்பு தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை (டிஆர்எஸ்) `பாரத் ராஷ்டிர சமிதி’ என தேசிய கட்சியாக அறிவித்து, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். பல்வேறு மாநில முதல்வர்களை சந்தித்த சந்திரசேகர் ராவ், வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் 3ம் அணி அமைக்க திட்டமிட்டு வருகிறார்.


இந்நிலையில்,  காங்கிரஸ்  எம்எல்ஏ கோமட்டிரெட்டி ராஜகோபால் பாஜவுக்கு மாறியதை தொடர்ந்து முனுகோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆளும் டிஆர்எஸ் மற்றும் பாஜ இடையே கடும் போட்டி நிலவுகிறது. டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சைபராபாத்தில் உள்ள ஒரு பண்னை வீட்டில் போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு டிஆர்எஸ் எம்எல்ஏக்களிடம் பாஜ சார்பில் பேரம் பேசப்பட்டது அம்பலமானது. அப்போது 3 பைகளில் இருந்த சுமார் ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்த 3 பேரின்  செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து, அந்த செல்போன் மூலம் யார்? யாருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் என்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News