பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர மாநில அரசு தடை.
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர மாநில அரசுகள் எதிர்க்கின்றன என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப்சிங் புரிதெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் மதுபானம் விற்பனையில் மாநில அரசுகள் அதிக வருவாயை ஈட்டி வருவதால் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் கூறினார்.
கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் எரிபொருட்களின் விலை 43 சதவீதம் உயர்ந்த போதும், கலால்வரி குறைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளால் இந்தியாவில் 2 சதவீதம் மட்டுமே விலை உயர்ந்ததாக அமைச்சர் குறிப்பிட்டா. அண்டை நாடுகளில் பெட்ரோல் தட்டுப்பாடு, விலை உயர்வு பிரச்னை இருந்த போதும் இந்தியாவில் அந்த பிரச்னை எழவில்லை என்றும் தெரிவித்தார்.
0 Comments