தமிழின் பாரம்பரியத்தை காப்போம்: காசி தமிழ் சங்கமம் விழாவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
இந்தியர்கள்மோடிகாசி தமிழ் சங்க விழாவாரணாசி: ‘மொழி வேறுபாடுகளை களைந்து, தமிழ் மொழியின் பாரம்பரியத்தை பாதுகாப்பது 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு’ என காசி தமிழ் சங்கமம் விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். காசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பண்டைய தொடர்புகளை புதுப்பிக்கும் விதமாகவும், இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாகவும், காசி தமிழ் சங்கமம் விழாவை ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. ஒரு மாத காலம் நடக்கும் இந்த விழாவை, உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக் கழக வளாகத்தில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். விழாவில், கலாசார துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, இணை அமைச்சர் எல்.முருகன், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments