Loading . . .




அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி.

The Forecast 3 years ago அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் .பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள்  (23.11.2022) கொடியசைத்து துவக்கிவைத்தார்.

இப்பேரணினை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:-

அரியலூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 01.01.2023 நாளை தகுதி) நாளாக் கொண்டு 2023 ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிடும் பொருட்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், பிழைத்திருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிக்கான விண்ணப்பப்படிவங்களானது (படிவம் 6, 6B, 7 மற்றும் 8) அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் 12.11.2022 (சனிக்கிழமை), 13.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் நடைபெற்றது. மேலும், 26.11.2022 (சனிக்கிழமை) மற்றும் 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் வாக்காளர்களுக்கு வழங்கிட முகாம்கள் நடைபெற உள்ளது. சிறப்பு இம்முகாம் நாட்களை பயன்படுத்தி 01.01.2023 ஆம் நாளில் 18-வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்பேரணியில் 18-வயது பூர்த்தியானவரா இன்றே வாக்காளராக பதிவு செய்வீர், வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றத்திற்கு படிவம் 8-ஏ, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு படிவம் என்ற வாசகங்கள் அடங்கிய 8 விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி 100க்கும் மேற்பட்ட அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் பேரணியாக சென்றனர். இப்பேரணியானது அரியலூர் உழவர் சந்தை வழியாக அரியலூர் பேருந்து நிலையம் வரை சென்று முடிவுற்றது.

இந்நிகழ்ச்சியில், அரியலூர் கோட்டாட்சியர் .ராமகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .பூங்கோதை, வட்டாட்சியர்கள் .வேல்முருகன் (தேர்தல் பிரிவு)..கண்ணன் (அரியலூர்) மற்றும் தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள், மாணவ. மாணவியர்கள், வருவாய்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

அரியலூர் Relateted News