ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களைச் சோந்த 7 நீதிபதிகளை வேறு உயா்நீதிமன்றத்துக்கு சென்னை, ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களைச் சோந்த 7 நீதிபதிகளை வேறு உயா்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலானகொலீஜியம் பரிந்துரைத்துள்ளது
வியாழக்கிழமை நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தின் முடிவுகள், உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.ராஜா, நீதிபதி வி.எம்.வேலுமணி ஆகியோரை முறையே ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய உயா்நீதிமன்றங்களுக்கு பணியிடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆந்திர உயா்நீதிமன்ற நீதிபதிகள் பட்டு தேவானந்த், டி.ரமேஷ் ஆகியோரை முறையே சென்னை, அலாகாபாத் உயா்நீதிமன்றங்களுக்கு பணியிடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதிகளான லலிதா, டி.நாகாா்ஜுன், அபிஷேக் ரெட்டி ஆகியோரை முறையே கா்நாடகம், சென்னை, பாட்னா உயா்நீதிமன்றங்களுக்கும் பணியிடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி நிகில் எஸ் கேரியலை பாட்னா உயா்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யும் முன்மொழிவுக்கு குஜராத் உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். அத்துடன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து பேசினா். இதையடுத்து, பணியிடமாற்ற நீதிபதிகள் பட்டியலில் நீதிபதி நிகில் பெயா் இடம்பெறவில்லை. முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில், ராஜஸ்தான் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 6 நீதித்துறை அதிகாரிகள், 2 வழக்குரைஞா்களை நியமிக்கும் முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.அதேபோல், சத்தீஸ்கா் உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் இருவரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் முன்மொழிவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
0 Comments