ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் 'டிரோன்' உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? வணிக தளவாடங்கள், விவசாயம், சுரங்கம், தொழில்துறை ஆகியவற்றுக்கான 'டிரோன்' பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? ராணுவ பயன்பாடுகள் மற்றும் ஆராய்ச்சிக்காக டிரோன்கள் தயாரிப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசு ஏதேனும் திட்டம் வகுத்துள்ளதா? ஆளில்லா விமானங்களை தயாரிப்பதற்கான சந்தை வாய்ப்புகள் குறித்து அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா? வணிக நோக்கங்கள் மற்றும் தளவாடங்களுக்காக ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் டிரோன்களை பயன்படுத்துவதற்காக மத்திய அரசால் பரிசீலிக்கப்படுகின்ற கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகள் என்னென்ன? என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க.வை சேர்ந்த தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
0 Comments