ரூ.1. லட்சம் கோடிக்கு மேல் கறுப்புப் பணம் மீட்பு: மத்திய அமைச்சர் தகவல்
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
ஒன்றிய அரசால் ரூ.1. லட்சம் கோடிக்கு மேல் கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ஏழைகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒவ்வொரு ரூபாயிலும் 15 பைசா மட்டுமே மக்களை சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒருமுறை கூறியிருந்தார்.
ஆனால், இன்றைக்கு நூறு சதவீதத் தொகையானது பயனாளிகளைச் சென்றடைகிறது. குறுக்குவழி அரசியலை மையப்படுத்தி செல்லாமல் நல்லாட்சியை நோக்கி அரசின் திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் பிரதமர் மோடியை தெளிவாக உள்ளார். நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்லாட்சியின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்ய டிஜிட்டல் கட்டமைப்பை பிரதமர் மோடி தயாரித்துள்ளார்.
அரசின் திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுமக்களின் நம்பிக்கையைஅதிகரித்துள்ளது. ஒன்றிய அரசால் ரூ.1.25 லட்சம் கோடி கறுப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது. ரூ.4,600 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
0 Comments