Loading . . .




சாதாரண டிக்கெட்களில் முன் பதிவு பெட்டியில் பயணம் செய்யலாம் தென்னக இரயில்வே அதிரடி

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

குறுகிய துாரம் பயணம் செய்வோர், சாதாரண டிக்கெட் எடுத்தாலும், விரைவு ரயில்களின் ஒரு சில முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் வசதியை, தெற்கு ரயில்வே நடைமுறைப்படுத்தி உள்ளது


பயணியரின் தேவைக்கு ஏற்ப, ரயில்வே புதிய திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இயக்கப்படும் ரயில்களிலும், பயணியர் கூடுதலாக பயணிக்கும் வகையில், ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்களில், சாதாரண டிக்கெட்டில், பகல் நேரங்களில், குறுகிய துாரத்திற்கு, முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் வகையில், 'டிரிசர்வ்டு' எனும் வசதியை ரயில்வே செயல்படுத்தி வருகிறது.

தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளாவுக்கு செல்லும் மொத்தம் 24 விரைவு ரயில்களில், ஓரிரு 'டிரிசர்வ்டு' பெட்டிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது

விரைவு ரயில்களில், 'டிரிசர்வ்டு' பெட்டிகள் வசதி, பல மாதங்களாக உள்ளது. தினமும் ரயிலில் பயணிப்போருக்கு, இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதிகபட்சம், 100 கி.மீ., துாரம் வரையில் பயணிக்கலாம்.

சாதாரண கட்டணத்துடன், 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். வாய்ப்புள்ள மேலும், சில ரயில்களில் இந்த வசதியை விரிவுப்படுத்தி வருகிறோம்.

பயணியர், 'டிரிசர்வ்டு' அல்லாமல், வழக்கமான முன்பதிவு பெட்டிகளில், உரிய டிக்கெட் இன்றி பயணித்தால் அபராதம் விதிக்கப்படும்

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News