Loading . . .




பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கண்டன அறிக்கை

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

பத்திரிகையாளர்கள்  கூட்டமைப்பு

கண்டன அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசி வருகிறார்.

பத்திரிகையாளர் கரிகாலனை பைத்தியக்காரன் என்றும் வாடா, போடா என்றும் நாகரீகமற்ற முறையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை தமிழ்நாட்டில் உடனடியாக இயற்ற வேண்டுமெனவும், பத்திரிகையாளர்களை தொடர்ந்து அவதூறாகவும், மரியாதை குறைவாகவும் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமேன தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில தலைவர் இளசை S கணேசன், மாநில பொதுச் செயலாளர் கா.குரு மற்றும் நிர்வாகிகள் அனைவரின் சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம்.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க தொடர்ந்து போராடி வருகிறது.

கேள்வி கேட்பது என்பது ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் உள்ள உரிமை. கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாதவர்கள் பொது வெளியில் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்து விடுவது நல்லது.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News