ஒன்றிய அரசு கடந்த 2016ம் ஆண்டு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்’ என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. இதில் 4 நீதிபதிகள், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாகவும், பெண் நீதிபதி நாகரத்னா பணமதிப்பிழப்புக்கு எதிராகவும் தீர்ப்பை வழங்கி உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு திடீரென புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால் நாட்டில் கருப்பு பணம் முழுவதுமாக ஒழிக்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
தொடர்பாக ரிசர்வ் வங்கி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் ஒன்றிய அரசின் விருப்பத்திற்கு ஏற்ப இது செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. எனவே இதன் மூலம் சுதந்திரமாக எந்த நவடிக்கையையும் எடுக்க ரிசர்வ் வங்கிக்கு இல்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் ஒரே நிலை நீடிக்க வேண்டும் என்று எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாத நிலை உள்ளது.
அதனால் தற்போது என்ன தான் நிவாரணம் வழங்க முடியும் என்றால் அது கேள்வியாக தான் இருக்கிறது.
பணமதிப்பிழப்பு விவகாரத்தை திடீரென அமல்படுத்தும்போது வரும் விளைவுகளை ஒன்றிய வங்கி கணக்கில் கொண்டதா ? என்பது வியக்கத்தக்க கேள்வியாக உள்ளது. மேலும் 98சதவீத நோட்டுகள் திரும்ப வந்து விட்டதாக விசாரணையின் போது ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மூலம் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தீவிரவாதம், உள்ளிட்ட தீய சக்திகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற நல்ல நோக்கத்தை புறந்தள்ளிவிட முடியாது. அந்த வாதங்களை ஏற்கிறேன். ஆனால் பணமதிப்பிழப்பு விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இல்லை என்பதை இந்த தீர்ப்பின் மூலம் திட்டவட்டமாக தெரிவிப்பதோடு, அந்த நடவடிக்கையை நான் எதிர்கிறேன். இருப்பினும் தற்போதைய நிலையில் மனுதாரர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது என்பதால் அதனை முடித்து வைக்கிறேன். இவ்வாறு அவர் தனது தீர்ப்பில் கூறினார்.
0 Comments