Loading . . .




அடுத்த ஆண்டு முதல் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை - மத்திய மந்திரி தகவல்

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

ஒடிசாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு (2024) முதல் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை தொடங்கப்படும் என கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை அடுத்த ஆண்டு (2024) மார்ச் அல்லது ஏப்ரலில் தொடங்கப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டு 4ஜி சேவையும், அடுத்த ஆண்டு 5ஜி சேவையும் வேகமாக வெளிவருவதை காண்போம்' என தெரிவித்தார்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News