Loading . . .




ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்கும்

தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக்

கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்தது

அல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி

செய்து சென்னை உயர்நீதிமன்றம்

உத்தரவிட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட தந்தை பெரியார்

திராவிட கழக செயலர் கண்ணதாசன்,

சென்னை உயர்நீதிமன்றத்தில்

தாக்கல் செய்த மனுவில், 'தமிழக

ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு

செப்.18-ஆம் தேதி பதவியேற்றார்.

மேலும், புதுவையில் உள்ள ஆரோவில்

பவுண்டேஷன் அமைப்பின் தலைவராக

அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

'1988 ஆரோவில் அறக்கட்டளை

சட்டத்தின்' கீழ் தலைவர் பதவி என்பது

சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறக்

கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, இந்திய அரசியலமைப்புச்

சட்டப் பிரிவு 158 உள்பிரிவு 2-இன் கீழ்

ஆளுநர் எந்தவொரு லாபம் தரக்கூடிய

நிறுவனத்திலும் பொறுப்பு வகிக்கக்

கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை மீறி அவர் தலைவராக

உள்ளார். இதன்மூலம் அவர் இந்திய

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக,

ஆளுநராக அவர் பதவியேற்கும்போது

எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு

எதிராக செயல்படுகிறார். எனவே,

அவர் ஆளுநராகப் பதவி வகிக்கத்

தகுதியற்றவர். அவரை பதவி நீக்கம்

செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ராஜா (பொ),

நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர்

கொண்ட அமர்வில் விசாரணைக்கு

வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்,

'ஆளுநர் மீது வழக்கு தொடர முடியாது

என அரசியல் சாசனம் சட்டப் பாதுகாப்பு

வழங்கியுள்ளது. அது ஆளுநர்

என்ற பதவியின் செயல்பாடுகள்

தொடர்பானதுதான். தனிப்பட்ட

முறையில் அவரது செயல்பாடுகள்

தொடர்பாக வழக்கு தொடர முடியும்.

மேலும், ஆதாயம் தரும் பதவி வகிக்கும்

ஆளுநர் ரவி, சட்ட விதிகளின்படி

ஆளுநர் பதவியில் நீடிக்கிறாரா

என விளக்கமளிக்க வேண்டும். சட்ட

விதிகளுக்கு முரணாகப் பதவியில்

நீடிப்பதாக இருந்தால் அவரை தகுதி

நீக்கம் செய்யலாம்' என வாதிடப்பட்டது.

பல மாநிலங்களில் ஆளுநர்

விளக்கமளிக்க உயர்நீதிமன்றங்கள்

நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறி

பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி

மனுதாரர் தரப்பில் வாதங்கள்

முன்வைக்கப்பட்டன.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள்,

வழக்கு விசாரணைக்கு உகந்ததா,

இல்லையா என்பது குறித்த தீர்ப்பை

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து

உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு

விசாரணைக்கு உகந்தது இல்லை

எனக் கூறி வழக்கை தள்ளுபடி

செய்து நீதிபதிகள் வியாழக்கிழமை

உத்தரவிட்டனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News