எழுத்தாளர் சூர்யா சேவியர் அவர்களின் "காவிரி நீரோவியம்" நூல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியீடு
The Forecast 3 years ago விளையாட்டு மேம்பாட்டு துறை
எழுத்தாளர் சூர்யா சேவியர் அவர்களின் "காவிரி நீரோவியம்" நூலினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்(08.01.2023) வெளியிட்டார்.எழுத்தாளர். சூர்யா சேவியர்அவர்கள் "காவிரி நீரோவியம் "என்ற நூலினை எழுதியுள்ளார். இந்த நூலினை *உயிர்மை" பதிப்பகம் வெளியிடுகிறது .இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முதல் பிரதியினை வெளியிட்டார். நூலின் முதல் பிரதியினை தமிழ்நாடு கொள்கை வளர்ச்சி குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் , திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், கரு.பழனியப்பன், கவிஞர் யுகபாரதி, வழக்கறிஞர். அருள்மொழி, ப்ரன்ட்லைன் முன்னாள் ஆசிரியர் விஜயசங்கர் பத்திரிக்கையாளர் ஜென்ராம், கல்வெட்டு ஆய்வாளர் பத்மாவதி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் மற்றும் புத்தக பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன், நூல் ஆசிரியர் சூர்யா சேவியர் உடனிருந்தனர்.எழுத்தாளர் சூர்யா சேவியர்அவர்கள் இராமநாதபுரத்தில் பிறந்தவர்.மதுரை, பரமக்குடி அருகே பார்த்திபனூர், திருவரங்கம் மற்றும் கீழக்கரை உள்ளிட்ட ஊர்களில் ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை பயின்றவர். பட்டப்படிப்பை பாளையங்கோட்டையில் பயின்றவர். 35 ஆண்டுகளாக திருநெல்வேலியில் வசித்து வருபவர். சாதி மத மறுப்பு, சுயமரியாதை திருமணம் செய்தவர். 20 ஆண்டுகளாக நாளிதழ் மற்றும் வார, மாத இதழ்களில் அரசியல், சமூகம், பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருபவர். மதவெறியின் முகவரி, நந்தன் சிண்ட்ரோம், தாமிரபரணியின் தாகம் தீருமா? உள்ளிட்டப் பல நூல்களையும் எழுதியவர்.
அரசியல், சமூக, பொருளாதாரத் தளத்தில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்பவர். சமூக செயற்பாட்டாளர் .
2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் "சொல்லின் செல்வர்" விருது பெற்ற பெருமைக்குரியவர்.ஆவார்.
0 Comments