Loading . . .




உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலின்போது நடந்தது என்ன? நாளை மறுநாள் பிற்பகல் விசாரணை.! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

The Forecast 3 years ago நீதித்துறை

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல் தள்ளிவைப்புக்கு காரணம் என்ன? அங்கு நடந்தது என்ன? என்பது குறித்து விரிவாக விசாரித்து உத்தரவிடப்படும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 11 செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. சில நிமிடங்கள் தேர்தல் சுமூகமான முறையில் நடந்துவந்தது. இந்த நிலையில் வாக்கு சீட்டை பெறுவதற்கான கியுஆர் கோடு சீட்டுகளை சிலர் மொத்தமாக அள்ளி சென்றுள்ளதாக தகவல் வந்தது.


இதனால் வாக்கு சாவடியில் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து வழக்கறிஞர்கள் சிலர் வாக்கு சாவடியில் தகராறு செய்தனர். இதைதொடர்ந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை சிலர் அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வழக்கறிர்கள் அங்கு கூடினர். பிரச்னை பெரிய அளவுக்கு மாறியதால் தேர்தல் நடத்தும் அதிகாரியான மூத்த வழக்கறிஞர் கபீர் தேர்தலை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.


இந்த நிலையில் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மீண்டும் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரியும் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதைக்கேட்ட நீதிபதிகள் இது குறித்து நாளை மறுநாள் மதியம் 2.15 மணிக்கு விசாரிக்கப்படும். வாதிடவுள்ளவர்கள் தங்களிடம் உள்ள ஆதாரங்களை தாக்கல் செய்யலாம். தேர்தலை நடத்திய தேர்தல் கமிட்டியும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

0 Comments

Post your comment here

நீதித்துறை Relateted News