Loading . . .




முக அங்கீகாரம், கருவிழி ஸ்கேனை வங்கிகள் வரம்புடன் பயன்படுத்த அனுமதி

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

மோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை குறைக்கும் விதமாக சில சமயங்களில் முக அங்கீகாரம் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள இந்திய வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார், பொதுத் துறையைச் சேர்ந்த சில வங்கிகள் இந்த வசதியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன

மேலும், இந்த வசதியை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வரம்பை மீறும் தனிப்பட்ட பரிவர்த்தனைகளை (ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை) மேற்கொள்ளும் நபர்களின் விவரங்களை வங்கிகள் சரிபார்க்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News