Loading . . .




தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழா

Arut Selvan 3 years ago தஞ்சாவூர்

முன்னாள் மாணவர் சங்கமம்


தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தஞ்சாவூர் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சலக தலைவருமாகிய . அருள்தாஸ் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். . அவர் தனது உரையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி அடைந்தமைக்கும் தன்னுடைய இந்த உயர்த்த பதவியை அடைவதற்கும், தன்னுடைய இரண்டு மகன்களும் மென்பொருள் பொறியாளர்களாக ஆவதற்கும் முழுமுதற்காரணம் தூய அத்தோணியார் மேல்நிலைப் பள்ளியே என்று கூறி நன்றி தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை மாநில அளவிலான 63-வது குடியரசு தின ஹாக்கி குழு போட்டியில் இரண்டாம் இடம் வென்ற இப்பள்ளியின் மாணவர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்து விருதுகள் வடிங்கபட்டது.

பள்ளியின் தாளாளர் அருட்திரு. K.ஜெரோம் அடிகளார், தலைமை ஆசிரியர் அருட்திரு. P.அந்தோணி (எ) அல்போன்ஸ், தஞ்சை மறைமாவட்ட பேராலய பங்கு தந்தை அருட்திரு பிரபாகர் அடிகளார், தஞ்சாவூர். TMSS இயக்குநர் அருளானந்து அடிகளார் ஆகியோர்   முன்னிலை வகித்தனர்.  

இந்நிகழ்ச்சியினை முன்னாள் மாணவர்சங்கத் தலைவர்.  M.A.கிளமெண்ட் அந்தோணிராஜ் செயலர்.  முத்துகுமார், முன்னாள் தலைவர் ரா. முகம்மது அலி உதவி தலைவர்  முத்தமிழ் விரும்பி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

நிகழ்ச்சியில் பல்வேறு முன்னாள் மாணவர்களும் பள்ளி ஆசிரியர்களும், தஞ்சை தலைமை அஞ்சலக துணைத்தலைவர்  M.குடிந்தைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிறைவாக முன்னாள் மாணவர் சங்கப் பொருளாளர்  நாசர் அவர்கள் நன்றி கூறினார்


0 Comments

Post your comment here

தஞ்சாவூர் Relateted News